இட்லி அதிபர் ரமேஷுக்கு இன்று பிறந்த நாள். பல் டாக்டர் ரெட்டி எதாவது நாவல்ட்டியா எதாவது செய்யனும்னு சொன்னாரு. கால அவகாசம் வேற இல்ல. உடனே ஐய்யங்கார்ஸ் MD ராக்கேஷுக்கு போன் அடிச்சேன் , ஒரு ப்ளேட் இட்லி மாதிரியே ஒரு கேக் வேணும்னு.
அதுக்கென்னா சார் செஞ்சிடுவோம்னு two hoursல போன் பன்னுனாரு, சட்னி சமேத இட்லி உடனாய கேக் பார்த்து அசந்துட்டேன்.
Thanx ராக்கேஷ்.
வாடிக்கையாளர் அப்ரோச்-ல ராகேஷ் எனக்கு ஒன் ஆஃப் த ரோல் மாடல்.
காரணம் ராகேஷின் போன் கால் அட்டெண்ட் செய்த சில நிமிடத்தில் என்னுடைய க்ளையண்ட் ஒரு ஜுவல்லரி ஓனர் போன் செய்து என்னன்னமோ அல்ல்ட்டரேஷன் சொன்னாரு. நான் சிம்ப்பிளா சொன்னேன் அதுக்கென்ன பாஸ் எடிட் செஞ்சி இரவு எந்நேரமா இருந்தாலும் உங்களுக்கு மெயில் செய்கிறேன் என்று. அதெல்லாம் முடியாதுங்க ரொம்ம்ம்ம்ம்ப கஷ்ட்டம்னு சொல்ல வேண்டிய நான் இப்டி சொன்னதுக்கு ஐயங்கார்ஸ் ராக்கேஷின் அப்ரோச் தான் காரணம்.
ஓக்கே இட்லி பர்த் டேய்க்கு வருவோம்.
ரமேஷ் இட்லி கடைல கேக் வெட்டி செலப்ரேட் பண்ணியாச்சி. டேபிள் மேல கேக் இருந்த ஒரிஜினாலிட்டிய பாத்தா யாராவது சாம்பார ஊத்திட போறாங்களோன்ற மாதிரி அப்டி ஒரு கலை நயம்.
Dr.Reddi ,sumo Karthi,Er Suresh Subbu usseein karthi perumal camraman VENKY etc etc
திடீர் கூட்டம் , கேக் கட்டிங்லாம் பத்து ரமேஷ் ஹேப்பி அண்ணாச்சி.
என்னமோ திடீர்னு ஒரு மூட்ல செய்றது தான் இதெல்லாம். இந்த நாள், இந்த நேரத்தில் போன வருஷம் யார் யார் எங்க இருந்தமோ, அடுத்த வருஷம் எங்கங்க இருப்போமோ ஆறு கண்டா.
திருநள்ளாறு ஹெவன் க்ரியேட்டர் சதீஷ், இந்த ரமேஷ் ரெண்டு பயலுகளுமே ஆளு சின்ன வயசுலேர்ந்தே குண்டா இருப்பானுங்க, கொஞ்சம் வளைஞ்சி நெளிஞ்சி வேலைகள் செய்ய மாட்டானுங்க , ஏதோ ஒரு மேன்வல் ஹெல்ப் என்றால் கூட இப்டி போவான் ஒருத்தன் அப்டி வருவான் ஒருத்தன், முடிஞ்ச வரை ஓப்பி அடிச்சிட்டு எஸ்க்கேப் ஆகிடுவானுங்க. ஆனால் ஒரு முறை என்னுடைய ஒலிப்பதிவு கூடத்தை திடீரென கட்டிடத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட ஓர் விரிசலால் மாற்ற வேண்டிய ஒரு சூழல் ஓவர் நைட்டில் ரமேஷ் சதீஷ் ரெண்டு பேரும் ரெண்டு பூதம் மாதிரி என்னோடு சேர்ந்து வேலை செய்து எனக்கு உதவி செஞ்சானுங்க. பூதம்னு உருவத்த சொல்லலை ஒர்க்க சொன்னேன். அதுக்கெல்லாம் கைமாறு செய்ய முடியாது. இப்டி வாய்ப்பு கிடைக்கும் ஏதோ ஒரு சூழலில் அவர்களை மகிழ்விப்பதில் ஓர் மகிழ்ச்சி.
ரமேஷ் ஆரம்பத்தில் ஃபைனான்ஸ், அது இது என பிசினெஸ்களும் பிறகு வெளிநாட்டு சம்ப்பாத்தியம் என்று என்னென்னமோ செஞ்சிட்டு ஒரு ஸ்டேஜ்ல ஒரு தள்ளு வண்டி இட்லி கடை வைத்த பொழுது, அவனுக்கு மனதிற்குள் ஓர் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வந்து விடக்கூடாது என்பதால் எனக்கு ஓய்வு நேரம் கிடைத்தால் அவன் கடையில் சென்று கொஞ்ச நேரம் நின்று பேசி வருவேன். மேலும் என் நண்பர்களையும் அழைத்து செல்வேன். சில நேரங்களில் காங்கிரஸ் பேரியக்க மாவட்ட தலைவர் அண்ணன் வலத்தெரு பாஸ் எங்களிடம் அவர் சின்ன வயதில் பட்ட கஷ்ட்டங்களையும், இன்று உழைப்பால் இந்த அளவு தான் உயர்ந்த கதைகளையும் சொல்லுவார் சந்திக்கும் நேரங்களில்.
பழைய இட்லி கடை கிட்ட நிக்கிறதுலயும் ஒரு சிக்கல் இருக்கும், அவன் இட்லி கடைக்க்கு பக்கத்துலயே ஒரு பார் இருக்கும், என்ன தான் நாம இட்லிய சாப்புட்டாலும் எத்தனை பேர் அதை சைடிஷ் என்று நினைப்பார்களோ என்று ஒரு வழியாக கடை மாறியது.
சென்ற வருடம் வண்டியிலிருந்து இந்த வருடம் ஓர் நிலையான கடையில் அனைத்து வசதிகளோடும் ஹோட்டல் வைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
அட்லி கிட்ட கூட கால்ஷீட் வாங்கிடலாம் இந்த இட்லி இப்போ ரொம்ப பிஸி.
natraJJ
2 comments
:) Looks Cute
nice artistic work,